மட்டக்களப்பு குருக்கள் மடம், கிரான்குளம் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கின்ற எல்லை பகுதியில் விவேகானந்த பூங்கா நாளைய தினம்(25) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
மட் புதுக் குடியிருப்பு சமூக நலம்புரி அமைப்பின்( SWO) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, விவேகானந்தா பூங்காவின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது .
இன் நிகழ்வில் முதன்மை அதிதியாக ஸ்ரீமத் சுவாமி அக் ஷராத்மானந்தஜி மகராஜ், (தலைவர் ராமகிருஷ்ண மிஷன்.கொழும்பு), பிரதம அதிதிகளாக ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தஜி மஹராஜ்(தலைவர் ராமகிருஷ்ண மடம்.தஞ்சாவூர், இந்தியா) அவர்களும் திருமதி ஜே.ஜே. முரளிதரன் (அரசாங்க அதிபர் மட்டக்களப்பு) அவர்களும், ஆன்மீக அதிதிகளாக ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி, மஹராஜ் அவர்களும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ், அவர்களும் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜி மஹராஜ், அவர்களும் அருட்தந்தை யோர்ஜ் ஜீவராஜ் விகார் ஜெனரல், அவர்களும் மற்றும் பல விசேட, கௌரவ அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பேரன்புக்குரிய அனைவரையும் விவேகானந்தா பூங்கா திறப்பு விழாவில் கலந்து தெய்வத்திரு மூவரின் அருளாசிகளையும், சுவாமிஜிக்களின் நல்லாசிகளையும் ,பெறுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஏற்பாட்டுக் குழுவினர்.