எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த பாகிஸ்தானின் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாஜிர் தோஸ்த் எனப்படும் வரிவிதிப்பு முறை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரி நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
முன்னதாக 6 நகரங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இந்த வரி முறையை பாகிஸ்தானில் உள்ள சுமார் 40 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக வணிக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.