இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் நேற்று (24) பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இதன்படி 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களிடமிருந்து மருத்துவப் பதிவேடுகளைப் பெறுவது கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பதிவுகள் பெறப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மருத்துவ பதிவேடுகளை பெறுவதன்மூலம் கடமைநேரத்தில் விபத்துக்களை தவிர்ப்பதுடன் பலரின் உயிரை காப்பாற்றவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் அண்மைக்காலமாக சாரதிகள் திடீரென நோய்வாய்ப்படுவது அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.