Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

9 months ago
in அரசியல், செய்திகள்

சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில், சனிக்கிழமை (24) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலைபோனவர்களை கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். இதேபோன்று, துணிச்சலான முடிவுகளையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டும். அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம்புகட்ட மக்கள் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தன அரசியலாகும். மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், துரோகிகளை தண்டிப்பதற்கு தயங்கப்போவதில்லை.

மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்த எமது எம்.பிக்கள், கொடுங்கோல் ஆட்சிபுரிந்த கோட்டபாயவை பலப்படுத்தவே இருபதாவது திருத்தத்துக்கு வாக்களித்தனர். பாராளுமன்றத்தில் 144 எம்.பிக்களை வைத்திருந்த இவருக்கு, சில சட்டங்களைத் திருத்துவதற்கு முடியாமலிருந்தது. இதனால், கொடுங்கோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக, எமது எம்.பிக்களை விலை பேசினார்.

சமூகத்தின் மானத்தை அடகுவைத்து கோட்டாவிடம் இவர்கள் விலைபோகினர். இவர்களின் ஆதரவால் பலமடைந்ததாலேயே, எமது ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோட்டாபய துணிந்தார். விலைபோன எம்.பிக்களின் உறவினர்கள் எரிக்கப்பட்டிருந்தால், சமூக வலிகளை உணர்ந்திருப்பர். இதனால்தான், சமூக நெறிக்கு உட்பட்டும், நீதிக்குக் கட்டுப்பட்டும் இந்த எம்.பிக்களை தூக்கி எறிந்துள்ளோம்.

சமுதாயத்தை வழிநடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும். மறைந்த தலைவர் அஷ்ரபின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது. உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது.

இது போன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.

சஹ்ரான் தலைமையில் பத்து இளைஞர்கள் செய்த தவறுகள்தான், எமது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால், நானுட்பட எனது குடும்பம், சமூக முன்னோடிகளான சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், மௌலவி ஹஜ்ஜுல் அக்பர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் எமது தாய்மார்கள் சிறை செல்ல நேரிட்டது. இவை, இன்னும் வேதனைகளாகவும், காயங்களாகவுமே உள்ளன. சாய்ந்தமருதிலும் இதன் தாக்கமும் எதிரொலியும் உணரப்பட்டது.

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த வலிகள் நீங்கிவிடும். எனவே, எமது தலைமையில் நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSLMCSrilanka

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.