மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 449, 686 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13448 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 332 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13116 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் 2024 தொடர்பாகவும் வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும் இன்று(27) இடம்பெற்ற செயலமர்வு தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஜஸ்டினா முரளிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.