போலியான முறையில் விஸ்கி ரக மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த உற்பத்திச்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரஜை ஒருவர் சட்டவிரோதமான முறையில் இந்த விஸ்கி மதுபான உற்பத்தியை சட்டவிரோதமாக மேற்கொண்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நீர் கொழும்பு குறணப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான நபர் ஒருவரும், பசியாலை பிரதேசத்தைச்சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி சாலையிலிருந்து போத்தல்களை சீல் வைக்கும் இரண்டு இயந்திரங்கள், ஒரு லீட்டர் விஸ்கி வெற்று போத்தல்கள், போலி விஸ்கி நிரப்பப்பட்ட போத்தல்கள், போத்தலுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் வகைகள், லேபள் வகைகள், மதுபான போத்தல் மூடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.