நடை பவனியாக இலங்கையை சுற்றிவந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதியின் பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார்.
இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கரையோர வழியாக முழு நாட்டையும் சுற்றி வருவதே இவர் மேற்கொண்டுள்ள சாதனை முயற்சியாகும்.
கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த ஷஹ்மி, இந்த நடைபவனியை காலி வீதியூடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, கிழக்கிலங்கையின் பொத்துவில், அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறையை தொடர்ந்து நடை பவனியாகவே பயணித்து மீண்டும் பேருவளையை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார்.