இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இந்தக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், குஜராத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் (29-08-2024) அரபிக்கடலில் கலந்து, இன்று கடற்கரையை விட்டு நகரும்போது சற்று வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடவில்லை.
ஒருவேளை இது புயலாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் பருவமழை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது, புயல் சுற்று பகுதியில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துக்கொள்வதால், அது கடந்து செல்லும் இடத்தில் மட்டுமே மழை இருக்கும். அந்த பகுதியை சுற்றியுள்ள பல நூறு கி.மீ தொலைவுக்கு வானிலை வறட்சியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.