நமக்கு பிடிக்காத ஒருவரிடமிருந்து வரும் வாஸ்ட்அப் மெசேஜை அவருக்கு தெரியாமலேயே படிக்க முடியும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறாதா? அதுமட்டுமல்லாமல், அந்த நபர் செக் செய்தால் கூட அதை கண்டுபிடிக்க முடியாது என்றால், எப்படி இருக்கும்? இந்த டிப்ஸ் இதோ.
இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) வைத்திருக்கவில்லை என்றால், நம்மை வித்தியாசமாக பார்ப்பார்கள். ஏனென்றால், வாட்ஸ்அப் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்டது. நேரில் பார்த்தால் கூட பேசாதாவர்கள், வாட்ஸ்அப்பில் மணி கணக்கில் கூட பேசுவார்கள். இதனால் சிலரிடம் பேசுவதை நீங்கள் தவிர்த்து வரலாம். சில நேரத்தில் பேசவே பிடிக்காமலும் போகலாம்.
இருப்பினும், அதுபோன்று உங்களுக்கு வரும் மெசேஜ்களில் சிலவற்றை படித்துப் பார்த்தால் என்ன என்று நீங்களே சிந்தித்திருப்பீர்கள். ஆனால், அனுப்பி நபருக்கு அது தெரிந்துவிடுமோ என்ற தயக்கம் இருக்கலாம். இதை தவிர்க்கவே மூன்று வாட்ஸ்அப் டிப்ஸ் கொண்டு வந்திருக்கிறோம். இதில் விசேஷம் என்னவென்றால் அனுப்பிவர், அதை நீங்கள் படித்தீர்களா? என்று செக் செய்தால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதுதான்.
வாட்ஸ்அப் விட்ஜெட் (WhatsApp Widgets) பயன்படுத்துங்கள்
உங்கள் போனின் ஹோம் ஸ்கிரீனை (Home Screen) லாங் பிரஸ் (Long-Press) செய்யுங்கள். அப்போது விட்ஜெட் (Widgets) ஐகான் அல்லது + (பிளஸ்) ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்து, வாட்ஸ்அப்பை அதில் சேர்ந்துக் கொள்ளுங்கள். அப்போது, வாஸ்ட்அப் ஹோம் ஸ்கிரீனில் இடம்பெற்றுவிடும். அதை உங்களுக்கு ஏற்றவாறு ரீசைஸ் (Resize) செய்து கொள்ளுங்கள். இப்போது, வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்கள் அதிலேயே தோன்றும். நீங்கள் வாட்ஸ்அப்பை திறக்க வேண்டியது கிடையாது.
ஏரோபிளேன் மோட் (Airplane Mode) பயன்படுத்துங்கள்
உங்களது போனில் ஏரோபிளேன் மோட் ஆன் செய்துவிட்டு, வாட்ஸ்அப் மெசேஜை படிக்கலாம். ஆனால், ஏரோபிளேன் மோட் ஆன் செய்வதற்கு முன்னால், நீங்கள் வாட்அப்பை ஓப்பன் செய்திருக்கக்கூடாது. நீங்கள் படித்து முடித்துவிட்டு, எப்போது ஏரோபிளேன் மோடை ஆஃப் செய்வீர்களோ அப்போதே அவர்களுக்கு நீங்கள் படித்தது தெரியும். இதையும் நீங்கள் ரீட் ரிசிப்ட்ஸ் டிசேபிள் (Disable) செய்துவிட்டு தவிர்க்கலாம்.
ரீட் ரிசிப்ட்ஸ் (Read Receipts) பயன்படுத்துங்கள்
இந்த டிப்ஸ் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் தெரிவிக்கிறோம். முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) செல்லுங்கள். அதன்பின் அக்கவுண்ட் (Account) டேப்பை கிளிக் செய்து, பிரைவசி (Privacy) பக்கத்தை திறந்துகொள்ளுங்கள். இப்போது, ரீட் ரிசிப்ட்ஸ் ஆப்சனை டிசேபிள் செய்துவிடுங்கள். அதோடு உங்களது, லாஸ்ட் சீன் (Last Seen) ஆப்சனையும் நோபடி (Nobody) கொடுத்துவிடுங்கள். இப்போது, நீங்கள் படிக்கும் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாது. இதுபோன்ற டிப்ஸ்களை ஈக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பயன்படுத்துங்கள்