Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கமலுக்கு மட்டும் மாமன்னன் திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ; பார்த்து விட்டு என்ன கூறினார் தெரியுமா?

கமலுக்கு மட்டும் மாமன்னன் திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ; பார்த்து விட்டு என்ன கூறினார் தெரியுமா?

3 years ago
in சினிமா

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், கமல்ஹாசனுக்காக மாமன்னன் படம் தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர் மாரி செல்வராஜிடம் பேசியது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

மாமன்னன் படம் பார்த்த கமல்ஹாசன்

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது படமான மாமன்னன், வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், அடுத்து உதயநிதியுடன் இணைந்தார். இவர்களுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆகியோரும் இணைய, தற்போது மாமன்னன் படம் ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 1ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் பா ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். அதேநேரம் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது.

தேவர் மகன் படத்தில் வரும் வடிவேலுவின் இசக்கி பாத்திரத்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் பேசியிருந்தார். மேலும், தேவர் மகன் இசை பாத்திரத்தின் பாதிப்பில் தான் மாமன்னன் உருவாகியுள்ளதாகவும் கூறினார். கமல்ஹாசன் எதிரில் இருக்கும் போதே அவரது தேவர் மகன் படம் குறித்து அதிரடியாக பேசி ட்ரோல் மெட்டீரியல் ஆனார் மாரி செல்வராஜ். அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக இந்த விஷயத்தில் பலரது ஆதரவும் கமல் பக்கம் தான் இருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை பாராட்டியவர்கள் கூட தற்போது மாரி செல்வராஜ்ஜை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படத்தை கமல்ஹாசனுக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டுள்ளதாம். கமல்ஹாசனுக்காகவே ஸ்பெஷலாக திரையிடப்பட்டதால் மாரி செல்வராஜ்ஜுன் அவருடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார்.

இறுதியாக மாமன்னன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கமல்ஹாசனை மாரி செல்வராஜ் கவனித்துக்கொண்டே இருந்துள்ளார். படம் குறித்து கமலின் விமர்சனம் என்னவென்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்துள்ளார். அப்போது மாரி செல்வராஜ் பக்கம் சென்ற கமல், அவரது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு படம் குறித்து பாராட்டி பேசினாராம். கமலிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனம் வந்துள்ளதால் மாரி செல்வராஜ்ஜும் ரொம்பவே எமோஷனலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK
காணொளிகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

July 20, 2026
Next Post
15 ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

15 ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.