Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆட்சியை கைப்பற்றவே பௌத்த மயமாக்கல் என்னும் நுட்பம்; ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு!

ஆட்சியை கைப்பற்றவே பௌத்த மயமாக்கல் என்னும் நுட்பம்; ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

தற்போது இலங்கையில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் அல்லது அதனை 350 ஏக்கர் வரையில் அகழ்த்தல் அல்லது தொல்லியல் வேலைகளுக்காக தடைசெய்திருக்கின்றார்கள் என எல்லாவெல மேத்தானந்த தேரர் சொல்கின்றார்.

இவ்வாறு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களைக் குடியேற்றக் கூடாது என்று கூறுவதானது பௌத்த மயமாக்கலை மிகவும் உக்கிரமான செயற்பாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு அவர்கள் நினைக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இன அழிப்பு நடைபெற்றது.

அதன் பின்னர் எதிர்ப்புக்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் மொத்தமாக பௌத்த மயமாக்கல் செய்து வடபுலம், மற்றும் கிழக்கு புலம் போன்றவற்றில் பௌத்தத்தைக் கொண்டு செல்வதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதேவேளை அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முடியாமலிருக்கின்ற இனவாதிகள் இந்த பௌத்த மயமாக்கல் எனும் நுட்பத்தினூடாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றார்கள்.

இந்த நாட்டை இனவாத, மதவாத ரீதியாக எரியவைத்துக் கொண்டு அந்த எரிகின்ற நெருப்பில் குளிர்காய்கின்ற போக்குகள் காணப்படுகின்றன.

கடந்த காலத்தில் இன அழிப்பு இடம்பெற்று அதற்குரிய நீதி கிடைக்கவில்லை.

தற்போது கலாசார அழிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

குருந்தூர், வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின், நெடுக்கல்மலை, குசலானமலை மற்றும் வெல்லாவெளி பகுதியிலும் பௌத்த மயமாக்கலுக்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மீண்டும் நட்டமடைந்த அரசியல் பாதையை இலாபமான பாதைக்கு கொண்டு செல்வதற்கு முயல்கின்றார்கள்.

75 ஆண்டுகள் சென்றாலும் இந்த இனவாதிகள், மதவாதிகள், திருந்தக் கூடிய நிலையில் இல்லை.

தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலைச் செய்துவிட்டால் அவர்கள் அடிமைகள் போல் அடங்கிக் கிடப்பார்கள்.

அவர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்பதற்குரிய எந்தவித தடயங்களும் இல்லாமல் செய்யும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்கான, உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக எதுவித தீர்வும் தமிழர்களுக்குக் கிடைக்காது.

சர்வதேசத்தின் பொறிமுறை ஊடாகதான் இனப்பிரச்சனை, காணாமலாக்கப்பட்டோருக்கான , பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளார்கள்” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
இலங்கை அணி வெற்றி!

இலங்கை அணி வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.