பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களில் கனடா நாட்டு பயனர்கள் அந்நாட்டு செய்திகளை பார்ப்பது முடக்கப்படவுள்ளது. அவ்வாறான செய்திகளுக்கு அந்த சமூக ஊடகங்கள் பணம் செலுத்தும் வகையில் கனடாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கனடா செய்தி நிறுவனங்களின் செய்திகளை பகிர்வதற்கு சமூக ஊடகங்கள் அந்த நிறுவனங்களுக்கு பணம் செலுத்த புதிய சட்டம் கூறுகிறது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே கனேடியர்களுக்கு செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சோதனைகளை முன்னெடுத்துள்ளது.
2021இல் அவுஸ்திரேலியாவில் இதேபோன்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து அந்நாட்டு பயனர்கள் செய்திகளை பார்ப்பது அல்லது பகிர்வது முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.