மதுபானம் சிகரெட் உள்ளிட்ட புகைப் பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் மரமடைகின்றனர்
என்று போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இன்று உலக போதைப்பொருள் எதிப்பு தினமாகும்.
இதையொட்டி போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட
வாறு தெரிவிக்கப்பட்டது.இதேநேரம் சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை வியாபாரமாக செயல்படுத்துவதற்கு மூலோபாயமாக பணத்தை முதலீடு செய்து வருகின்றன. கஞ்சா பாவனையை முதலீட்டு திட்டமாக இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் முதியோர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம் – என்றும் தெரிவிக்கப்பட்டது