அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த அவசர நாடாளுமன்றக் கூட்டம் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.