தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்திய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டத்தின் அழைப்பாளர் பிரியந்த ஹேரத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று (11) முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் பிரியந்த ஹேரத் தெரிவிக்கையில்,
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்த முடியாது. நான் இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று (11) முறைப்பாடு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலை ஒரு விளம்பரமாக பயன்படுத்தாமல் அதனை எதிர்கால சந்ததிக்கு உதவும் விதமாக மாற்றுவது ஜனாதிபதி வேட்பாளர்களின் பொறுப்பாகும்.
எனவே, இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அவதானமாக இருப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்தார்.