மகாவம்சம் யுனெஸ்கோவின் உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 24ஆம் திகதி தொடக்கம், மகாவம்சம் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு யுனெஸ்கோவால் உள்வாங்கப்பட்ட உலக ஆவணப் பாரம்பரியப் பட்டியலில் 64 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மகாவம்சம் உலகின் மிக நீளமான உடைக்கப்படாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புத்தர், பேரரசர் அசோகர் மற்றும் உலக மதமாக பௌத்தத்தின் எழுச்சி பற்றிய தனித்துவமான தகவல்களைக் கொண்ட ஆசியாவின் முக்கியமான வரலாற்று ஆதாரமாக மகாவம்சம் விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.