சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹங்குரன்கெத்த காவல் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற மக்களை கலைப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 ஆண்களும், பெண்களும் காவல் நிலையத்தினுள் நுழைய முயன்றுள்ளதுடன், பெரும்பாலான ஆண்கள் மது போதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கலவரக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
காவல்துறையினரின் எச்சரிக்கை துப்பாக்கிப் பிரயோகத்தை தொடர்ந்து சற்று பின்வாங்கிய அந்த குழுவினர் முற்றுகையை கைவிட்டு வீதிக்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.