கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி பதக்கம் பெற்று மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
இதில் 3 போட்டியில் மாகாண மட்ட புதிய சாதனை படைத்துள்ளதுடன், ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஸலாம் அவர்களுக்கும் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை வழிநடத்தி பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் யூ.எல். ஷிபான் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம். ரியால், ஏ.டபலியு. எம். ஆசாத் கான் ஆகியோருக்கும் போட்டியில் பங்கேற்று தனது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும், போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.