Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுவரையில் 46தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் மட்டுமே மீறலாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் எந்த தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,

21ஆம் திகதி நடைபெறவுள்ள 09வது ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஆயத்தங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை 81 வலயங்களாக செயற்படுத்தப்படுகின்றன. வாக்களிப்பு நிலையங்களின் தூரங்கள், மக்கள் தொகைகளைக்கொண்டு இந்த வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு பொறுப்பாக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் 21ஆம் திகதி காலை 07மணி தொடக்கம் 4.30 வரை நடைபெறும். இதற்காக அலுவலகர்களுக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் என்னும் இடமாற்றம், பதிவு உயர்வு போன்ற முறைப்பாடுகள், சுவரொட்டிகள் ஒட்டிய முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர். கட்சி அலுவலகத்தில் மட்டும் அதுவும் குறிப்பிட்ட அளவிலேயே சுவரொட்டிகளை ஒட்டமுடியும். சில இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் கூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அது தொடர்பான விபரங்கள் கிடைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக்கொண்டு அவை அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!

July 23, 2026
500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

July 23, 2026
அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!
செய்திகள்

அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!

July 23, 2026
Next Post
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு