இலங்கையின் தேசிய பூங்காவில் இருந்து 92 வகை பட்டாம்பூச்சிகள் உட்பட அரிய வகை பூச்சி இனங்களை சேகரித்து வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு 6 கோடி ரூபாய் (அமெரிக்க டொலர் 200,000,யூரோ 150,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த 68 வயதுடைய தந்தையான லூய்கி ஃபெராரிக்கும், அவரது 28 வயதுடைய மகனான மட்டிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த மே 8 ஆம் திகதி கண்ணாடி போத்தல்களில் அடைந்து வைத்திருந்த பூச்சி இனங்களுடன் யால தேசிய பூங்கா காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
விலங்குகளை ஈர்க்கும் பொருட்களுடன் பூச்சிகளை கவர்ந்து இழுத்து, அவற்றை இரசாயன முறையில் பாதுகாக்க மெழுகுப் பைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.