கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (15) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ்சா இருந்தத்துடன் அப்பகுதியில் காணப்பட்ட கப்வாகனத்தையும் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்
அத்துடன் இச்சம்வத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையை பொருட்கள் அனைத்தும் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸ் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.