வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 7ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை 04ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய விண்ணப்பங்களை 07.08.2023 ஆம் திகதி வரை அனுப்பலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கு 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும்
குறித்த கடன் திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையத்தளத்தில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.
மேலதிக தகவல்களை 070-3555970/79 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.