Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய அனுர!

விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய அனுர!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த சலுகையானது, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்தோடு, விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கும் மானியம்

இதேவேளை, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
Next Post
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த உலக வங்கி!

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த உலக வங்கி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு