Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் 11 திட்டங்கள் மீள ஆரம்பம்!

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் 11 திட்டங்கள் மீள ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.

ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று (26) பிற்பகல் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.

அதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவத் திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தொலைக்காட்சி ஒலிபரப்பை டிஜிட்டல் மயமாக்கல், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தித் திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிராம உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், களு கங்கை நீர் வழங்கல் திட்டம், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியன விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் ஹபரண- வெயங்கொட மின் கடத்தல் வலயமைப்பு மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் என்பவற்றை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதோடு, முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் களனி கங்கை புதிய பாலத்தின் நிர்மாணப்

பணிகளுக்கான கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் நயோக்கி கமோஷிடா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 6, 2026
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி
செய்திகள்

இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி

October 6, 2026
சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!
செய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!

October 6, 2026
Next Post
முதல் தமிழ் எம்பியாக சிறீதரனுக்கு கிடைத்த அங்கீகாரம்!

முதல் தமிழ் எம்பியாக சிறீதரனுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு