எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து முதலாவது சுயேச்சை குழு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமூக மேம்பாட்டு இணையம் என்ற பெயரில் முதலாவது சுயேச்சை குழு அதன் இயக்குநர் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா சுஜிந்தன் நேற்று முன்தினம்(26) யாழ் ஊடக அமையத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருட கால போராட்டத்திற்கு பின்னர் தமிழ் தேசியத்தை பற்றி பேசுபவர்களால் தமிழ் மக்களுக்கு அரசியல் நீதியில் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
தமது சுக போக வாழ்க்கைக்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
வயது முதிர்ந்த நிலையிலும் பாராளுமன்ற கனவுடன் தமிழ் தேசியம் சார்ந்தவர்கள் காத்திருக்கும் நிலையில் தமிழ் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்.
நாம் சுயேச்சை குழுவாக இளம் சமுதாயத்தினருக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்கள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ அதே போல வடக்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஆகவே, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முதியவர்களை நீக்கி படித்த இளம் சமுதாயத்தினரை பாராளுமன்றம் செல்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.