Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை!

புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை!

3 years ago
in மட்டு செய்திகள்

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை நேற்று (01) நிகழ்த்தப்பட்டுள்ளது.

புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு “பிளாஸ்டிக்கை கடந்து செல்வோம்” (Pass on plastic ) எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று பாடசாலை அதிபர் ஆர்.யே.பிரபாகரன் தலைமையில் புனித மைக்கேல் சாரண படையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

29.57 செக்கனில் ஐம்பது சாரண மாணவர்களினால் 2124 பிளாஸ்ரிக் வெற்று பொத்தல்களினால் 150 இலக்கத்தை அமைத்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளனர்.

இந் நிகழ்வின் கின்னஸ் சாதனைக்கான பரிந்துரை நடுவர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் வாகரை பிரதேச செயலக கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜேயேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டு தமது கடமையினை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் சோழன் புத்தக உலக சாதனை நிறுவனத்தினால் (Cholan book of world record) சான்றிதழ்கள் இதன் போது மைக்கேல் கல்லூரியின் சாரண மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது 2022/2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை சாரண மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் பாக்கு நீரினை நிந்தி கடந்த தவேந்திரன் மதுசிகனுக்கு வெற்றி கேடயம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு யேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகமும், நிகழ்விற்கு அதிதிகளாக 231 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டார, உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், DIG உதித் லியனகே, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், வலய கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் மாவட்ட சாரணர் ஆணையாளர் விவேகானந்தன், சாரண குழு ஆசிரியர் பத்மநாதன், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஏனைய பாடசாலைகளின் சாரண மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
மட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

September 14, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
Next Post
தமிழர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேலுமொரு விகாரை; நாளை வழிபாடுகள் ஆரம்பம்!

தமிழர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேலுமொரு விகாரை; நாளை வழிபாடுகள் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு