Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

2 years ago
in செய்திகள்

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த மின் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டி ‘எபிக் லங்கா’ தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒக்டோபர் முதலாம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமது லஃபர் தாஹிர், உண்மைகளை பரிசீலித்து, அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் சட்டத்திற்கு முரணான வகையில் இந்த மின் கடவுச்சீட்டு கையிருப்பை வாங்க முடிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

‘எபிக் லங்கா’ பிரைவட் லிமிடெட் தாக்கல் செய்த இந்த ரிட் மனுவில், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐந்து மில்லியன் மின் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் நடைமுறையை மீறி செப்டம்பர் 2 ஆம் திகதி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அதன் ஒரு பகுதியாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 மின் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, உரிய அமைச்சரவை தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அன்றைய தினம் மனுவை மீளப்பெறவும் உத்தரவிட்டார்.

அதேசமயம் மனுதாரர் நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரயா ஆஜரானார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

October 7, 2026
ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!
செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!
செய்திகள்

நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!

October 7, 2026
Next Post
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு