நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியள்ளார்.
அவர்களில் சிலர் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும், நீதிமன்றங்களில் சிலரின் வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தற்போதுள்ள நாற்பத்தி இரண்டு சதவீத வாக்குகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைக்காமல் அநுர தரப்பு முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.