வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையில் 58 மாணவிகள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி, பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக கல்வி நிர்வாக பிரதி கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ் ,வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர்களான நிதர்சினி மகேந்திர குமார், என்.குகதாசன், பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபாகரன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக ஏ சித்திகளையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிக ஏ சித்திகளையும் பெற்ற பாடசாலையாக வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.