பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ஐ. எஸ். எச். ஜே. இலுக்பிட்டிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் திருமதி பாலசூரிய, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக பி. எம். டி. நிலுஷா பாலசூரியவை நியமிப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிரேஷ்ட ஆலோசகர்கள் இருவரை நியமிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 41 (1) வது பிரிவின் அதிகாரங்களின்படி, அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு தனது ஊழியர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் துமிந்த ஹுலங்கமுவ (பொருளாதார மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்) மற்றும் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்) ஆகியோரை நியமிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது.