2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,
வருடம் அரசாங்க சட்டமூலங்கள் தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள்
2020 07 00
2021 30 00
2022 44 02
2023 29 05
2024 36 14
மொத்தம் 146 21
அரசாங்க சட்டமூலங்கள் 146
தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 21
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் 167
இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம்,
2023ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம்,
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம்,
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம்,
2023ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்,
2023ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம்,
2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம்,
2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம் உள்ளிட்டவை இக்காலப் பகுதியில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களாகும்.