Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைத் தெருக்களில் கவனிப்பார் இன்றி வீதிகளில் திரியும் சிறுவர்கள்!

இலங்கைத் தெருக்களில் கவனிப்பார் இன்றி வீதிகளில் திரியும் சிறுவர்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மை காலத்தில் சமூக ஆய்வுகளின்படி இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும் பெரியவர்களின் கவனிப்பின்றி கணிசமானோர் தெருக்களில் சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர்கள் பிச்சை எடுப்பது, சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, மது மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றுக்கு பலியாகி வருவதாக கூறப்படுகிறது.

கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும், மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் வீதிச் சிறுவர்களைக் கணிசமான அளவில் காணலாமெனவும் ஊட்டச்சத்து குறைபாடு, சுவாச நோய்கள் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு அவர்கள் இலகுவாக இரையாகலாமென்றும் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வறுமை, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை சமூகங்கள் மீதும் அனைவரது கவனமும் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இல்லை என்றால் அவற்றில் பல சமூக, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சனைகள் உருவாகலாம் என நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டங்களிலும், சில மதப் பிரிவுகளிலும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் இருப்பதால், அதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் அவர்களின் உடல்நிலையை மேம்படுத்த வேண்டுமென்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
Next Post
விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவது உறுதி; அநுர தரப்பு தெரிவிப்பு!

விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவது உறுதி; அநுர தரப்பு தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு