இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்குச் சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.








