மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் நேற்று(04) பாடசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
20 வயதுக்குட்பட்வர்களுக்கான மல்யுத்தப் போட்டியில், ரி.தர்மி, 44 முதல் 47 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் வீ.கணிக்கா வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இம் மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் என்.தர்மசீலன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் வீ.லவக்குமார் கலந்துகொண்டார்.
மாணவிகள் மற்றும் மாணவிகளுக்குப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள் கல்லூரி பிரதான மண்டபத்திற்கு பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற ஜெயக்குமார் சஸ்மித்தா என்ற மாணவியும் கௌரவிக்கப்பட்டார்.