Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர அரசாங்கம் கோட்டாபய அரசியலை பின்பற்றுகின்றதா?

அநுர அரசாங்கம் கோட்டாபய அரசியலை பின்பற்றுகின்றதா?

7 months ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜேவிபி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை ‘கன்சைட்’ வதை முகாமில் கடற்படை அதிகாரிகளால் பணத்திற்க்காக படுகொலை செய்ய பட்ட 11 கொழும்பு தமிழ் மாணவர்கள் தொடர்புபட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரிகளுக்கு உதவிய மூத்த அதிகாரியாக அடையாளம் காணப்பட்டு இருந்தார். குறிப்பாக இவ் வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுமித் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரை Commodore (Senior naval rank) ஆக அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க பதவியுர்த்தி இருந்தார். அதே போன்று தனது மேலதிகாரிகளுடன் பரிமாறிய இரகசியக் கடிதம் ஒன்றின் மூலம் பிணையிலிருந்த சுமித் ரணசிங்கவை கடற்படையின் புலனாய்வுப் பணியில் ஈடுபடுத்த அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க ஏற்பாடு செய்து இருந்தார்.

இது மாத்திரமின்றி பிணையில் விடுவிக்கப்பட்ட சுமித் ரணசிங்கவிற்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு வழங்கவும் அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சுமித் ரணசிங்கவிற்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை உளவு பார்க்கும் வசதியையும் அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க சுமித் ரணசிங்கவிற்கு வழங்கி இருந்தார். அதே சமயம் 2009 -2012 காலப்பகுதியில் திருகோணமலை ‘கன்சைட்’ வ*தை முகாமில் நடந்த பல விடயங்கள் தொடர்பாக அறிந்திருந்த அதிகாரிகளில் ஒருவராக அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க அவர்களை The International Truth and Justice Project அடையாளம் காட்டி இருந்தது.

இந்த உண்மைகளுக்கு மத்தியில் அரச நிறுவனங்களின் தலைவர்களாக தங்கள் கட்சி உறுப்பினர்களையும் நண்பர்களையும் நியமித்து வரும் ஜேவிபி அதன் தொடர்ச்சியாக அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க அவர்களை இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்து உள்ளது.

தண்டிக்க வேண்டிய கிரிமினல் குற்றவாளிகளை அதிகாரத்தில் நியமித்து பாதுகாக்க முயலும் கோட்டபாய ராஜபக்சே கால நுட்பத்தை எந்த வகையிலும் சகிக்க முடியாது. அதிகாரத்திற்கு வந்து வெறும் இரண்டு வாரம் தானே என சப்பைக்கட்டு நியாயம் சொல்ல முடியாது. வசந்த கரன்னகொட உட்பட High Profile கடற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட படுகொலைகளை விசாரித்த நிஷாந்த சில்வா அவர்களை கொல்ல கடற்படை உயரமட்டத்தில் நடத்த சதிகள் அம்பலமாகியிருந்த போதும் பிண்ணனி இதுவரை கண்டறியப்படவில்லை.

அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க உட்பட அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்தினால் இந்த வழக்கு நிஷாந்த சில்வா கொலை முயற்சி மட்டுமின்றி கடற்படை வலையமைப்பு சம்பந்தபட்ட பல நூறு கடத்தல் காணாமலாக்குதல், கொலை சூத்திரங்களை கண்டறிய முடியும்.

ஆனால் ஜேவிபி இதை செய்யுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
செய்திகள்

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

May 18, 2025
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
Next Post
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு