Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று சனிக்கிழமை (17) இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து, முகத்து வாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில் டச்பார் பகுதி வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடிபடகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்து மீட்டனர்.

சுமார் 4 அடி கொண்ட சதுரமான றெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு, அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு, அதனை சுற்றி மொழுகுதிரி போன்ற வடிவிலான் முன்விளக்குகள் ஒளிரவிட்டு, மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இந்த இன அழிப்பு நினைவு கூரும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இதனை எங்கிருந்து வாவியில் விட்டார்கள் என தெரியாது அரசாங்க புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசாரை திக்கு முக்காட வைக்கப்பட்டததுடன், மீட்கப்பட்ட அந்த மிதக்கும் நிலையில் தயாரிக்கப்பட்ட இன அழிப்பு தூபியை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
Next Post
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு