கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் போது 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55 சதவீதம் நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04.07.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55 சதவீதம் நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தது.
மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுடன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்கனள ஆரம்பிப்பதற்கு தகுந்த சூழல் உருவாகியுள்ளது”என கூறியுள்ளார்.