காத்தான்குடியில் மூன்று டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசூருதீன் தெரிவித்தார்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பதுரியா பகுதியில் பாரிய அளவில் டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் பணிபுரையின் கீழ் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 40 பேர் அழைக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டது.
20 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரதேசத்தில் உள்ள தொண்டர் நிறுவனங்கள் நகர சபை மற்றும் பொது நிறுவனங்களில் உதவியுடன் பாரிய பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று (08) காலை முதல் காத்தான்குடி பகுதியில் உள்ள பல வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று அதிகளவிலான வீடுகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சிவப்பு எச்சரிக்கை பிரசுரங்களும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.