பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக “இனியாவது நமக்காக நாம்” என்ற அமைப்பின் ஊடாக புதிய சுயேட்சைக் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (08) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பரம்பரை கட்சிகளை புறக்கணித்து சுயேட்சையாக நுவரெலியாவில் களம் காணுவதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் மாற்றத்திற்காக நுவரெலியா தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போது,
நாட்டை வளப்படுத்துவதற்கு பல ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் மலையகத்தில் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு மாற்றம் தான் நிகழ வேண்டும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும் அதற்காகவே பழைய கட்சிகளை புறக்கணித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து சுயேட்சையாக களம் இறங்கி உள்ளோம் எனத் தெரிவித்தனர் .