அரச நிறுவனங்களில் 96 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களில் நிலவும் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் 02 மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், போட்டிப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.