Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை கோரும் சம்பிக்க ரணவக்க

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை கோரும் சம்பிக்க ரணவக்க

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம். கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய குடியரசு முன்னணியின் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (28) மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் சகல மத தலங்களுக்கும் சென்று தமது கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டோம்.கொழும்பு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னெடுத்த பணிகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகரின் கழிவகற்றல், திண்மக்கழிவகற்றல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு தீரல்வு கண்டோம்.

கொழும்பு நகரில் வாழ்பவர்களில் 70 சதவீதமானோர் குறைவான வருமானத்தை பெறும் தரப்பினர்களாவார்.இவர்கள் ஏழைகள். இவர்களில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி குடியிறுப்புக்களை வழங்கினோம்.மிகுதியாகவுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

2015-2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம்.கொழும்பினை அழகுப்படுத்துவோம்.கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
Next Post
வானில் நிகழப்போகும் சூப்பர் நோவா வெடிப்பு

வானில் நிகழப்போகும் சூப்பர் நோவா வெடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.