இன்று நினைத்து பார்க்க முடியாத அளவு யூடியூப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் இன்று யூடியூப் பல நபர்களுக்கு கிரியேட்டர்களாக மாறி பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் அளித்து வருகிறது. பல கிரியேட்டர்கள் இன்று தங்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு துறையை தேர்ந்தெடுத்து அது சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். யூடியூப் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறதோ, அதே அளவு ஆன்லைன் கேம்களும் பெரிய அளவில் பலராலும் ஆர்வமுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் யூடியூப் தற்போது ஆன்லைன் கேம்களை அறிமுகப்படுத்துவது குறித்து சோதனை செய்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் கேமிங் துறையிலும் கால் பதிக்க முடிவு செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
யூடியூப் நிறுவனம் தனது புதிய ப்ராடக்ட் ஆன “பிளேயபில்ஸ்” (Playables) சோதனை செய்ய பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது என Engadget தெரிவித்துள்ளது. இந்த பிளேயபில்ஸ் மூலமாக யூடியூப்பில் இருந்து பயனாளர்கள் நேரடியாக ஆன்லைன் கேம்களை விளையாடலாம். இந்த தகவல் முதன்முதலாக The Wall Street பத்திரிக்கையில் வெளியானது.தற்போது நிறுவனம் சோதித்து வரும் இந்த கேம்களை வெப் பிரவுசர் பயன்படுத்தியோ அல்லது யூடியூப் ஆப் மூலமாகவோ யூடியூப் வெப்சைட்டில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனகல் விளையாடலாம்.
எக்கச்சக்கமான கேம்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வந்தாலும் குறிப்பாக ஸ்டேக் பவுன்ஸ் (Stack Bounce) என்ற விளம்பர ஆதரவு பெற்ற ஆர்கேட் கேம் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளையாட்டில் பௌன்சிங் பால் பயன்படுத்தி பிளேயர்கள் அடுக்கி வைத்திருக்க கூடிய பிரிக்குகளை அடுக்கடுக்காக சரித்து விட வேண்டும்.
அதே நேரத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மூலமாக செயல்படும் ஒரு டப்பிங் டூல் யூடியூப்பில் கூடிய விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலமாக ஒரு நபர் தான் உருவாக்கிய வீடியோக்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடலாம். நிச்சயமாக இந்த டூல் பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது. AI மூலமாக இயங்கும் இந்த டூல் கிரியேட்டர்களுக்கு அவர்கள் உருவாக்கிய வீடியோக்களை ட்ரான்ஸ்கிரிப்ட் செய்து டிரான்ஸ்கிரிப்ஷன் ஆக கொடுக்கும். அந்த ட்ரான்ஸ்க்ரிப்ஷனை கிரியேட்டர்கள் வாசித்து அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடிட் செய்து கொள்ளலாம்.