நாட்டில் நிலவும் காலநிலைக்கமைய புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் பயணிக்கும் சகல மீன்பிடி படகுகளும் மீள் அறிவித்தல் விடுக்கும் வரை கடலுக்கு செல்லக் கூடாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

நிலவும் எச்சரிக்கை நிலைமை தொடர்பில் தற்போது வரையில் தொழிலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு அறிவிக்குமாறும் இந்நிலைமை தொடர்பில் மீனவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் மேலும் அறிவிந்துள்ளது.