மஹகும்புக்கடவலவின் ஜெயராஜ்புர பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடி பல்வேறு பகுதிகளுக்கு இறைச்சி விநியோகம் செய்யும் சந்தேகநபர் ஒருவர் வீடொன்றில் இருந்து பாரியளவிலான இறைச்சியை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மான் மற்றும் பல்வேறு வன விலங்குகளின் பாகங்கள் அடங்கிய லொறியை பறிமுதல் செய்தனர்.
பாலாவியா விமானப்படை தளத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நேற்று (16) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மஹகும்புக்கடவலை அரசு காப்புக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் மான், காளை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, அதிக விலைக்கு பல்வேறு பகுதிகளுக்கு இரகசியமாக கொண்டு விற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பில் கடத்தலுக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேகநபர், சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளதாகவும், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளின் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.