பொதுவாக ஆபிரிக்கா கண்டத்தின் சில நாடுகளில் மிகவும் பழமையான பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் இன்னும் நவீன உலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. வழுக்கை தலை ஆண்கள் தமது தலைகளினுள்ளே தங்கத்தை கொண்டிருக்கின்றனர் என்ற ஒரு கதை அங்கு பரப்பப்பட்டது.
இதன் காரணமாக அவ்வாண்டு ஐந்து வழுக்கை தலை ஆண்கள் இனந்தெரியாத குழு ஒன்றினால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் தலையற்ற உடற்பகுதியே கிடைத்தது. இந்த கொடூரமான காரியத்தை செய்தவர்கள் மிகவும் பின்தங்கிய இனக்குழுக்களை சேர்ந்தவர்களாவர்.
கொல்லப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் உடலில் உள்ள சில உறுப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கண்டு பிடித்தனர். கோடீஸ்வரர்களின் உடல் உறுப்புகளை வைத்து பூஜை செய்யும் பழக்கம் மொசம்பிக்கை சூழ அமைந்திருக்கும் நாடுகளான தன்சானியா , மலாவி உள்ளிட்ட பகுதி மக்களிடையே உள்ளது.
அதே சமயம் இவ்வாறான மூட நம்பிக்கை ,புரளி கதைகள் அந்த நாட்டில் பேசப்பட்டு வருவது வழக்கமாக இருந்தாலும் இக் கொலை நடைபெற்றமைக்கான காரணத்தை பொலிஸார் வேறு கோணங்களில் இருந்தும் விசாரித்து வருவதாகவும் ,மொட்டை தலையுடன் குறித்த பகுதிகளில் வசிக்கும் அல்லது பிரயாணப்பட்டு வரும் ஆண்களை எச்சரிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.