நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி பெல்ஜியமில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
இது தொடர்பான தகவலை அஜித்குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடமும், இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் மூன்றாவது இடத்தை வென்றது.
இதில் துபாயில் நடைபெற்ற போட்டி என்பது 24 மணி நேர போட்டி, அதேபோல் இத்தாலியில் நடைபெற்ற போட்டி என்பது 12 மணிநேர போட்டி ஆகும். இந்நிலையில் தற்போது பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி இரண்டாவது இடம் பிடித்து உலக அளவில் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அஜித் குமார் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அஜித்குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸிங்கில் ஈடுபடத் திட்டமிட்டு, அதற்கு ஏற்ற வகையில் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார்.
படங்கள் ரிலீஸ் ஆனாலும் இவரது கவனம் முழுவதும் முழுக்க முழுக்க GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் இருக்கிறது.
இந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள தனது பெயரில் அஜித்குமார் ரேஸிங் அணி என்ற அணியை உருவாக்கியுள்ளார் அஜித்குமார். மேலும் ரேஸில் கலந்து கொள்ள, அஜித்குமார் மிகவும் சீரியஸான டயர்ட்டை பின்பற்றி தனது உடல் எடையைக் குறைத்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற ரேஸில் மூன்றாவது இடமும். இத்தாலியில் நடைபெற்ற ரேஸில் மூன்றாவது இடமும், பெல்ஜியம் ரேஸில் தற்போது இரண்டாவது இடம் பெற்று அசத்தியுள்ளது.
இது தொடர்பான தகவலை அஜித்குமார் ரேஸிங் அணி மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அஜித் குமார் ரேஸிங் அணி கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் குமார் ரேஸிங் அணி கோப்பையை கையில் ஏந்தும்போது, அஜித் தனது கையில் இந்திய நாட்டு தேசியக் கொடியை வைத்திருந்ந்தார்.
மேலும் பெல்ஜியமில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தையத்தை நேரில் பார்க்க அஜித் குமாரின் ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். இவர்கள் அனைவரும் அஜித்தைப் பார்த்ததும் A.K… AK .. எனக் கத்தினார்கள். அவர்களைப் பார்த்ததும் அஜித்குமார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.