புனித பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அண்மையில், கடுமையான நிமோனியா பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று (21) கேமர்லெங்கோ கார்டினல் ஃபெரெல், அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது பரிசுத்த தந்தை பிரான்சிஸின் மரணத்தை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்க வேண்டும்.
இன்று காலை 7:35 மணிக்கு ரோம் பாப்பரசர் பிரான்சிஸ், எமது தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.” என்று வத்திக்கானின் தொலைக்காட்சி காணொளியில் அறிவித்தார்.