வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் வசிப்பவரின் வாகனம் வேறொரு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மாகாணத்தில் இருந்து வருமான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது நேரத்தைச் செலவழிக்கும் மிகவும் கடினமான பணி என மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ,
எனவே மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் விரைவில் இணைக்குமாறு மேல் மாகாண ஆளுநருக்கு அமைச்சர் விஜித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார்.