Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்

1 year ago
in செய்திகள்

நுவரெலியா இ.போ.ச டிப்போவின் கீழ் இயங்கும் நுவரெலியா நானுஓயா மற்றும் ரதல்ல வரை தினமும் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பல பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

தினமும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து (wpNC – 2232) இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்து காலை முதல் நானுஓயா பிரதான நகர் வரை இயக்கப்படுகின்றது இறுதியில் இரவு 7:15 நுவரெலியாவிலிருந்து ரதல்ல நகர் வரை இயக்கப்படுகிறது.

இருந்தும் குறித்த பேருந்தில் வழித்திடலுக்கு பொருத்தமற்ற (வெளிமடை – பொலன்னறுவை) என்ற பெயர் பலகை பெரியதாக காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் நானுஓயா,ரதல்ல என்ற பெயர் பலகை சிறியதாக ஓரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் புதிதாக நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வழித்தடம் கேட்டு வரும் நபர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் வேறு ஒரு ஊர் என்று நினைத்து குழப்பம் அடைந்து வருகின்றனர் , அதிகமானவர்கள் நுவரெலியாவிலிருந்து வெளிமடை அல்லது பொலன்னறுவை செல்வதற்காக ஏறி இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன பின்னர் நடத்துனரீடம் பயணச் சீட்டு பெரும்போதே பேருந்து பயணிக்கும் சரியான இடம் நடத்துனரினால் அறிவிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் நீண்ட தூரம் பயணித்த பின்னர் மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி வரும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் அதிக வயதானோர் மற்றும் கண் பார்வை குறைபாடுகள் உள்ளோர் பெரிய அளவில் மாத்திரம் உள்ள பெயர் பலகையில் உள்ள வழித்திடத்தை கேட்டறிந்து பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் நிலையும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் , இவ்வாறான பெயர் பலகையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றன.

இதனால் குழப்பம் அடைந்த நுவரெலியாவிலிருந்து நானுஓயா மற்றும் ரதல்ல பயணம் செய்யும் பயணிகளும் இந்த பேருந்தில் ஏற தயக்கம் காட்டி வருவதாகவும் இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தற்போது வெளிச்சத்துடன் ஒளிரும் டிஜிட்டல் பெயர் பலகைகள் வைத்தால் அனைவரும் நலம் பெறுவார்கள் எனவும் (wpNC – 2232) இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்தில் உடனடியாக தேவையற்ற பெயர் பலகையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பிரதேச மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
எதிர்க்கட்சியின் வெளிநடப்பிற்கு தோல்வியே காரணம்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

எதிர்க்கட்சியின் வெளிநடப்பிற்கு தோல்வியே காரணம்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.