Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முற்பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டு வரும் வியாழேந்திரன்

முற்பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டு வரும் வியாழேந்திரன்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்க களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு இன்று(19) வருகைதந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் முறைப்பாட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, எனது அனைத்து தகவலும் பெறப்பட்டன. எனது கையடக்க தொலைபேசி மற்றும் மெய்க்காலவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. ஆனால் இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன்.

அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலைசெய்து எனது பெயருக்கும், எனது முற்போக்கு கழகத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்துவருகின்றார். முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக இவ்வாறு கருத்துகளை தெரிவித்த அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கினை வாபஸ் செய்தோம்.

ஆனால் அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலைசெய்துள்ளார்.அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை இன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்துள்ளேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
Next Post
கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு